கர்நாடகாவைப் போலவே மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை, மதிக்க போவதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு பலப்பல காரணங்களால் குறைந்து கொண்டே வந்தது, அதையும் கோர்ட்டில் போராடி தீர்ப்பு வாங்கியாச்சு... ஆனால் பொதுவாக காவேரி விஷயத்தில் கர்நாடகா அரசுதான் நீதிமன்றங்களின் தீர்ப்பை மதிப்பதில்லை, இப்போதைக்கு குறைந்த அளவானாலும் பரவாயில்லை, அது உறுதியாக தொடர்ந்து கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில் மத்திய அரசும் கர்நாடகாவைபோல தீர்ப்பை மதிக்கவில்லை, மதிக்க போவதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையாகினும், அரசாங்க திட்டங்களாயினும் சரி, விவசாயிக்கும் … Continue reading கர்நாடகாவைப் போலவே மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை, மதிக்க போவதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது

Advertisements

தயிரா? மோரா? கோடைக்கு சிறந்தது எது? — உங்களுக்காக

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா? அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா? என்ற சந்தேகம் அனைவருகும் இருக்கும். என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு தக்கவைத்துக்கொள்ள உதவும். via தயிரா? மோரா? கோடைக்கு சிறந்தது எது? — உங்களுக்காக

கண் தானம் பற்றிய சில செய்திகள்

இந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை 'தேசிய கண் தான இரு வார விழா'வாக அறிவித்துள்ளார்கள். இந்த இரண்டு வாரங்களும் மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், கண் வங்கிகள், கண் மருத்துவமனைகள் பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன. செப்டம்பர் 8 தேசிய கண் தான நாளாக … Continue reading கண் தானம் பற்றிய சில செய்திகள்

ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை

ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம். ஆண்ட்ராய்ட் (Android 1.0): அமெரிக்க … Continue reading ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை

நீங்கள் வித்தியாசமானவரா? இதை செய்யுங்கள் !

மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத்தம் தேவை. உடனே தொடர்பு கொள்ளுங்கள், முருகன் - 99999 99999. என்ற செய்தி கிடைக்கப்பெற்றால், எவ்வளவோ அவசியமில்லாத செய்திகளையெல்லாம் forward செய்கிறோம். இந்த செய்தியையும் forward செய்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்படும்.என்ற நல்ல என்னத்தில் நாமும் செய்தியை பலருக்கும் அனுப்புகிறோம். இப்படி ஒரு அனுபவம் அநேகமாக நம்மில் எல்லோருக்குமே வந்திருக்கும். நாமும், குழந்தையின் உயிர் காப்பாற்ற பட வேண்டுமே என்ற … Continue reading நீங்கள் வித்தியாசமானவரா? இதை செய்யுங்கள் !

ரத்த தானம் செய்வது நல்லது

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்? வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவர் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம். யார் ரத்த தானம் செய்யக்கூடாது? உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை … Continue reading ரத்த தானம் செய்வது நல்லது

உங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்

* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும். * உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் … Continue reading உங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்