உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்மையுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
அப்படி என்ன செய்து விட்டார்? அது நினைத்துபார்க்கவும் முடியாத கருணை செயல்.
நாராயணன் கிருஷ்ணனுக்கு வயது 29. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்!
பிரபல தாஜ் ஹோட்டலின் பெங்களூர் கிளையில் தலைமை சமையல் கலைஞராக பணியிலிருந்தவரின் திறமை புரிந்து அவரை தங்களின் ஸ்விட்ஸர்லாந்துக் கிளையில் பணியாற்ற தேர்வு செய்திருந்தனர்.
இன்னும் ஒருவாரத்தில் கிளம்ப வேண்டும். பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொள்வதற்காக மதுரைக்குச் சென்றார்.
அங்கே, மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக ஒருநாள் காலையில் தாய், தந்தை, சகோதரியுடன் காரில் புறப்பட்டார். மேம்பாலம் அருகே கார் செல்லும்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது என்பது மிகச் சாதாரண வார்த்தை!
பாலத்தின் அடியில் ஒரு முதியவர், தனது மலத்தைத் தானே எடுத்து வாயில் வைப்பதைப் பார்த்தார். பசியின் கொடுமை!
பதறிப் போய் நடுச் சாலையில் அப்படியே காரை நிறுத்தியவர், அருகில் இருந்த கடைக்கு ஓடிச் சென்று இட்லி வாங்கி அவரிடம் கொடுத்தார். ஒரு நிமிடத்திற்குள் அத்தனை இட்லியையும் விழுங்கிவிட்டு நிமிர்ந்த முதியவரின் கண்களில் கண்ணீர். தனது கையை வேஷ்டி நுனியில் துடைத்துக் கொண்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நன்றி என்றும் சொல்லவில்லை. சொல்லவும் தெரியாது. காரணம், அவர் ஒரு மனநோயாளி!
அவர் ஒரு மனநோயாளி என்றறிந்ததும் அந்த இளைஞருக்கு ஒரே அதிர்ச்சி. குடும்பத்தினருடன் ஆலயத்திற்குச் சென்று மீனாட்சியை வழிபட்ட போதும் அவரது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அந்தப் பெரியவரையே சுற்றிச் சுற்றி வந்தது. மதியம் தனக்கான தயிர் சாதத்தைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு போய் அவருக்குக் கொடுத்தார். பெரியவர் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் அதையும் வாங்கி உண்டார்.
இந்தப் பெரியவரின் பரிதாப நிலை அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.
முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி.
பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன்…,” என்றார் கிருஷ்ணன்.
கிருஷ்ணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை கிருஷ்ணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.
இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.
அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் கிருஷ்ணன்.
பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து கிருஷ்ணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.
இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாட்டுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் கிருஷ்ணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.
இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
இவரைப்பற்றி CNN வெளியிட்டுள்ள ஆங்கிலக் கட்டுரை இது:
Posted in களம் | Leave a Comment »
| இங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி
E-BOOKS உங்கள் பார்வைக்கு , பதிவிறக்கி கொள்ள……. உங்கள் நேரத்தை மிச்சபடுத்தும் நோக்கில் 70-க்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே கோப்பில்……… கோப்பு அடக்கம்
சமையல் குறிப்புகள்
Download link : http://rapidshare.com/files/405020080/Tamil_e-Books.rar
|
Thanks to பிரியத்தோழி
Posted in களம் | 1 Comment »
நினைத்தது நடக்கவில்லை என்பதால், ஆசைப்பட்டதை அடைய முடியாது என்று பல தருணங்களில் முடிவுக்கு வந்துவிடுகிறோம். அந்த முடிவுதான், இலக்கை அடைவதற்கு ஏதுவாகக் கண் முன்னே இருக்கும் இன்ன பிற வாய்ப்புகளையும் கவனிக்க முடியாமல் செய்துவிடுகிறது
Posted in களம் | Leave a Comment »
|
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா? உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள். ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது. From: Therinjikko Bloggie |
Posted in களம் | Leave a Comment »
|
சென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர் இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்திப் பார்த்தனர். சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் பிரவுசர் பதிப்பு 6ல் தன் பயன்பாட்டினைத் தொடர்ந்து, அதில் தான் மேற்கொண்ட பல புதிய ட்ரிக்ஸ் குறித்து நீண்ட கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. அவற்றை இங்கு பார்க்கலாம். கூகுளின் குரோம் 6 தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம். 1. தொடங்கும் இணையப் பக்கம்: ஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது. இதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் “options” “basics” ஆகியனவற்றை கிளிக் செய்திடவும். பின்னர் “open the following pages”என்பதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதில் “ add” என்பதில் கிளிக் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் அண்மையில் நீங்கள் பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் பட்டிய லிடப்படும். இவற்றில் நீங்கள் இணையத் தொடர்பினைத் தொடங்கும்போது, இணைப்பு இறக்கி உங்களுக்குக் காட்ட வேண்டிய, இணைய தளத்தின் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை இதில் டைப் செய்திடவும். 2. சர்ச் இஞ்சின் மாற்றுக: குரோம் பிரவுசர், கூகுள் மட்டுமின்றி வேறு தேடுதல் சாதனங்களையும், பிரவுசரில் இணைக்க வழி தந்துள்ளது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தேடுதல் சாதனம் குரோம் பிரவுசரில் இல்லாமல் இருக்கலாம். அவற்றில் ஒன்றை இந்த பிரவுசரிலேயே தேடுதல் தளமாக அமைக்க விரும்பினால், வழக்கம்போல பைல் ரென்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின் “options”/ “manage” எனச் செல்லவும். தேடுதல் சாதனத்திற்கான பிரிவைக் காணவும். இங்கு நீங்கள் விரும்பும் தேடுதல் சாதனம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுத்து “make default” என்ற பட்டனை அழுத்தவும். 3.அவசரத்தில் மூடிய தளம் திறக்க: அதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறந்து பணியாற்றுகையில், சில வேளை களில் எந்த தளத்திற்கான டேப் எது என்று அறியாமல், அதனை மூடிவிடுவோம். மூடிய பின்னரே, அதற்கான முகவரி நினைவில் இல்லாமல், அல்லது எப்படி அந்த தளத்தினைத் திறந்தோம் என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். இவ்வாறு மூடிய பத்து தளங்களை மீண்டும் பெற குரோம் பிரவுசரில் வழி உள்ளது. Ctrl+shift+T என்ற கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் திறக்கப்படும். இப்படியே மீண்டும் மீண்டும் அழுத்த, மூடப்பட்ட பத்து தளங்களைத் திரும்பப் பெறலாம். 4. பிரவுசர் பாரில் டேப்: புக்மார்க் பார்கள் மிக வேகமாக நிரம்பப் பெறும். இதனால் தளங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுகையில், சில டேப்கள் நம் பார்வையில் இருந்து மறையும். இணையத்தில் இருக்கும் ஒரு வேளையில், குறிப்பிட்ட சில தளங்களை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டிய திருப்பின், இந்த தள டேப்கள் நம் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதால், நமக்கு சற்று சிரமம் ஏற்படும். இதற்குத் தீர்வாக குரோம் ஒரு வழி தருகிறது. புக்மார்க் ஒன்றை அட்ரஸ் பாரில் குத்தி (pin)வைக்க இந்த வழி உதவுகிறது. அப்படிக் குத்தி வைத்திடுகையில், ஒரு சிறிய ஐகான், அந்த தளத்தின் பிரதிநிதியாக அட்ரஸ் பாரில் அமர்ந்து கொள்கிறது. இதனைக் கிளிக் செய்து, தளத்தினை எளிதாகப் பெறலாம். இவ்வாறு குத்தி வைத்திட, எந்த தளத்தை இப்படி அமைக்க வேண்டுமோ, அந்த டேப்பின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் “pin tab” என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர் இது வேண்டாம் என்று கருதினால், மீண்டும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் “unpin” என்பதில் கிளிக் செய்திட, ஒட்டிக் கொண்டிருந்த சிறிய ஐகான் நீக்கப்படுவதனைக் காணலாம். நீங்கள் பிரவுசரை எப்போது மூடுகிறீர் களோ, அப்போது, இவ்வாறு குத்தப்பட்ட அனைத்து தளங்களின் ஐகான்களும் நீக்கப்படும். இந்த செட்டிங்ஸ் அந்த பிரவுசிங் காலத்திற்கு மட்டுமே. 5. குரோம் நினைவகம்: குரோம் பிரவுசர் அதன் வேகத்திற்குப் பெயர் பெற்றது. அப்படி இருந்தும் சில வேளைகளில் வேகம் குறைகிறதா? ஒரு டேப் தவிர மீதம் உள்ள அனைத்து டேப்களையும் மூடவும். இதற்கு Ctrl+W R களை அடுத்தடுத்து அழுத்தினால், அவை ஒவ்வொன்றாக மூடப்படும். ஒரு டேப் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை மூடவும். மீண்டும் இவற்றைத் திறக்க Ctrl+Shift+T ஆகிய கீகளை அழுத்தவும். மூடப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும். இதனை அவ்வப்போது செயல்படுத்தினால், குரோம் எடுத்துக் கொள்ளும் மெமரி ரெப்ரெஷ் செய்யப்பட்டு, வேகம் குறையாது. இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. குரோம் தொகுப்பின் டாஸ்க் மானேஜர் செயல்பாட்டினை இயக்கலாம். இதனைப் பெற ஷிப்ட் + எஸ்கேப் (Shift+Esc) கீகளை அழுத்தவும். இப்போது கிடைக்கும் பட்டியலில், திறந்திருக்கும் தளங்களில் எந்த தளம் அதிக மெமரி இடத்தினை எடுத்துக் கொள்கிறது என்று பார்க்கவும். அதனைத் தேர்ந்தெடுத்து, “end process” என்பதனை அழுத்தி இயக்கத்தினை மூடவும். இன்னும் தெளிவாக குரோம் பிரவுசரின் மெமரி பயன்பாட்டினைப் பார்க்க வேண்டும் என்றால்,டேப் ஒன்றைத் திறந்து “about: memory” என டைப் செய்திடவும். இப்போது மற்ற பிரவுசர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டி ருந்தால், அவை எடுத்துக் கொள்ளும் மெமரி இடமும் காட்டப்படும். From: therinjikko bloggie |
Posted in களம் | Leave a Comment »
Copy stories from Hollywood + Add Tamil Culture + Add a Young Heroine and
Add 6 Songs + Fighting sequences = A Super Hit Tamil Movie
Here, some examples below…
Original Copy

Copy like Shankar, Goutham Menon, Mani Rathnam, K.S.Ravi kumar, etc…… are earning Crores and Crores, by simply Copying a Hollywood or European Movie……
Posted in களம் | Leave a Comment »
From WordPress Bloggie
Posted in களம் | Leave a Comment »
“Why love if losing hurts so much?
I have no answers anymore; only the life I have lived.
The pain now is part of the happiness then.
The finger game,
Making the bed,
Following us on walks,
Sleeping on the edge.
The “spot of the week” was your
Favorite place to nap,
Except when cuddle emergencies would strike,
Then it was sprint…tackle – straight to a lap.
The only cat I know who would
Always come around
To greet you for his nap pickup,
To get carried upside down.
A force to be reckoned with
10 pounds of fluff.
We learned to respect when you
Had to be tough.
“Don’t touch me” kitty
We dared not embrace.
Big stray dogs
Out of the yard you would chase.
You were not just a cat.
You were our very best friend.
If animals go to heaven,
Surely we will see you again.
No more “Figgage.”
No more fluffy kitty
With the beautiful face
And gray tipped hair that made you so pretty.
I didn’t think we would have to say goodbye so soon.
An enormous chunk of our hearts is going with you.
********
The pain and the happiness. That’s the deal.
Posted in 1, களம் | Leave a Comment »
நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ?
எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.
திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம் ! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச் (Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும். இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.
இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் ( Ted Huston ) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர். ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ? திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். “தான் தான் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர்.
திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது.
குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும்.
“அது பச்சைக் குழந்தை தானே” என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன. வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா ? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.
பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.
குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன.
பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.
பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர்.
மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. “குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா கத்துவார். “குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை” என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.
சில குடும்பங்களில் “நான் தான் செய்வேன்” எனும் சண்டை பாதி நேரம் ஓடும். “நீ செய்ய வேண்டியது தானே” எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் ( Gary Direnfeld).
தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். “தான் செய்வதெல்லாம் சரி” யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது.
ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.
கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம்
என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.
கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை ! முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs). இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை.
நன்றி: சேவியர்
Posted in களம் | Leave a Comment »
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
–மகாகவி சுப்பிரமணிய பாரதி
In English:
Spend my days in
search of food,
Tell petty tales,
Worry myself with thoughts,
Hurt others by my acts,
Turn senile with grey hair
And end up as fodder to the
relentless march of time
As yet another faceless man?
–The Great Poet Subramaniya Bharathiyar
Posted in களம் | Leave a Comment »
“மரணம்- நான் இருக்கும் வரை அது என்னை நெருங்கபோவதில்லை, அது என்னை நெருங்கும் போது நான் இருக்க போவதிலை”
– யாரோ ஒரு பெரிய அறிஞர், ஏதோ ஒரு காலத்தில் சொன்னது

மரணம்.
இந்த வார்த்தையை சொல்லவே பயமாக இருக்கும். நாம் இன்னொருவரின் மரணத்தை பார்க்கும் பொழுது உண்மையாக பயபடுகிறோமா? அல்லது இரக்கபடுகிறோமா?.
நமக்கு தெரிந்தவர் மரணித்தால் நாம் ஏன் அழுகிறோம், அவ்ர் பிரிவை நினைத்தா? அல்லது நமக்கு வர போகும் மரணத்தை நினைத்தா?
நாமெல்லாம் இறப்போம் என்று ஒரு நாளாவது நினைத்து பார்த்திருக்கிறோமா? அப்படி நினைக்கும் போது நம் மனதுக்குள எத்தகைய எண்ணம் ஓடும்..
இந்த மரணத்தை கொண்டே உங்களை நீங்கள் உக்குவித்துக்கொள்ள முடியும் தெரியுமா!
மரணத்தின் வாசலை தொட்டவர்கள் என்ன சொல்லுகிறார்கள், ஒவ்வொன்றாக பார்ப்போம்…
Near Death Experience (NDE): மரண வாசல்.
எல்லா மதங்களிளுமே மரணத்திற்க்கு பிறகான வாழ்க்கையை பற்றி குறிப்பிருக்கிறது.அதாகபட்டது நம் மரணத்தை கடவுள் முடிவு செய்கிறார், சரியாக அந்த நொடியில் நாம் மரணித்தவுடன் நாம் பாவ புண்ணியங்கள் கணக்கிட படுகின்றன, பட்டவுடன் அதற்க்கான தண்டனை கூடவோ குறைவோ நமக்கு கிடைக்கிறது. சிலர் மரணத்தை நெருங்கிவிடடு aஉயிர் பெறுகிறார்களே, அவர்களின் அனுபவ்ம் என்ன?
உங்களை மரணம் நெருங்கும் சமயம் நீங்கள் ஒரு பெரிய குகையை நோக்கி நடப்பீர்கள், உங்களுக்கு விதவிதமான வினோதமான சத்தங்கள் கேட்கும். அந்த குகை வெளிச்சம் பொருந்தியிருக்கும், நீங்கள் மெதுவாக அதை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அந்த கதவை திறக்கும் முன் ஒரு குரல், “உங்கள் மரணம் இப்பொழுதில்லை,பின்னொரு நாள் தான். இப்பொதைக்கு நீங்கள் திரும்பி செல்லலாம்” என்று சொல்லும்.
திடிரென அடைத்துக்கொண்டிருந்த மூச்சை பலமாக வெளியே விடுவீர்கள், உடல் குலுங்கி எழும் பொழுது பல உருவங்கள் உங்கள் முன் மங்களாக தெரியும். சில நொடிகளில் கண்கள் தெளிவாகி, உங்களுக்கு கடன் கொடுத்த்வர் உங்கள் முன் சோகமாக் நிற்பதை பார்க்கலாம், அப்புறம் அந்த ட்ரேட் மார் வசனத்தை உங்கள் வாய் முனகும், “நான் எங்கே இருக்கிறேன்” . சில புத்திசாலிகள், ”நான் உயிரோட தான் இருக்கிறேனா” என்று வசனத்தை மாற்றி சொல்லலாம். என்னவானாலும் சரி நீங்கள் செத்து பிழைத்தவர்; எமனை பார்த்தே சிரித்தவர்.
இப்படி தான் செத்து பிழைத்த பல பிரகஸ்பதிகள் தனக்ளின் மரண வாசல் அனுபவத்தை விவரிக்கிரார்கள். இதெல்லாம் உண்மையா என்றால் விஞ்ஞானம் கையை பிசைந்து உதட்டை பிதுக்குகிறது.. இதை ஓரளவு விவரிகக் முனைந்தால்..
நாம் தூங்கும் போது கனவு வரும், கிட்டத்தட்ட அதுமாதிரி தான். அதெப்படி சொல்லிவைத்தார் போல் அனைவருக்கும் ஒரே மாதிரி என்று யோசிக்காதீர்க்ள். மரணத்தை பற்றி நாம் கேட்கும் கதைகள் அதை நீங்கள் எப்படி கற்பனை செய்திருப்பிர்ர்கள், அது தான் அந்த நொடியில் இப்படி காட்சியாக வந்து தொலைக்கும். பொதுவாக மரணத்தின் பின் என்று நாம் சினிமாக்களிலும், கதை புத்தகங்களிலும் பார்ர்கும் காட்சிகள் இப்படி தானே இருக்கும் அது நம் ஆழ் ம்னதில் பதிந்து, நம் மூளை தடுமாறும் பொழுது இப்படி வந்து தொலையும்.
உடல் சீராக வேலை செய்யும் பொழுது நாம் எழுந்து நம் மரண வாசல் கதையை சொல்லுகிறோம், கிட்டத்தட்ட, அதுவும் நாம் ஐசியுவில் இருந்து யாரவது சொன்னால் தான், இல்லையென்றால் நமம தூங்கியவதாகவோ, மயக்கமடைந்த்தாகவோ தான் நினைப்போம். யாரவது சொல்ல போய்த்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு இதையெல்லாம் சொல்லுவோம். இல்லையென்றால் தேமே என்று இருப்போம்.
மரணப்படுக்கை முறையில் ஊக்குவித்தல்:
இது ஒரு சைக்டிரிக் முறை, ஒரு தேர்ந்த மனநல மருத்துவர் – குழப்பமடையாதீர்கள் இப்பொழுது செக்ஸ் பிரச்சனைகள் டீல் செய்பவர்கள் தான், அவர்களை மனநல மருத்துவர் என்றுறு பார்க்காமல் ஏதோ செக்ஸ் ஸ்பெஷ்லிச்டாக மட்டும் பார்க்காதீர்கள்.
ஒரு மனநில மருத்துவர் உங்களை ஆழ நிலைக்கு அழைத்து சென்று, உங்கள் மனதை அவர் கட்டு பாட்டில் வைத்து,
நீங்கள் மரணபடுக்கையில் இருப்பதாக நினைக்க சொல்லுவார்,
பின்பு, மரண சம்பவிக்கும் தருவாயில் யாருடன் என்ன பேச நினைக்கிறீர்கள் பேச சொல்லுவார்.
நீங்கள் உங்கள் மரணத்தை உணருவீர்கள், உங்களின் மன இருக்கத்தை குறைத்துவிடும்.
இந்த பயிற்ச்சி முடிந்து எழும் போது நீங்கள் புதிய பிறவி எடுத்தை போன்று தோன்றும்.த்ளிவு பெற்றிருப்பீர்கள்.
சும்ம முயற்ச்சி செய்து பாருங்களேன். இந்த நொடியிலிருந்து சரியாக 8 மணி நேரத்தில் நீங்கள் மரணத்தை தழுவ போகிறீர்கள் அது உறுதி என்றால் உடனடியாக என்ன என்ன வேளைகள் செய்வீர்கள்? அந்த வேகத்தில் செய்து பாருங்களேன்…
Posted in களம் | Leave a Comment »
தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.
இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.
தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.
அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.
2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.
இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.
நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.
தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.
திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.
திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.
நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.
கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.
இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.
மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.
நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.
(கட்டுரையாளர்: மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. பாண்டியன் அவர்கள்).
நான் கேள்விப்பட்ட ஒரு (வேதனை தரும்) ஜோக் :
ஒரு விஞ்ஞானி ஒரு கருத்தரங்கில் கூறினார் : "நான் இரண்டு செய்திகள் வைத்திருக்கிறேன், ஒன்று நல்ல செய்தி இன்னொன்று கேட்ட செய்தி"
கூடிஇருந்தவர்கள் கேட்டார்கள் : சொல்லுங்கள்
விஞ்ஞானி: இன்னும் இருபது வருடங்களில் நமக்கு குடிக்க சாக்கடைத் தண்ணீர் தான் கிடைக்கும்
கூடி இருந்தவர்கள் : அப்பொழுது நல்ல செய்தி என்ன?
விஞ்ஞானி : நான் சொன்னதுதான் நல்ல செய்தி, கேட்ட செய்தி என்னவென்றால் அந்த சாக்கடைத் தண்ணீர் கூட அந்த சமயத்தில் வேண்டிய அளவு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
Posted in களம் | Leave a Comment »
Religion and Customs are not considered as Bad, but lets see to that, it doesnt take a toll on True purpose of our very existence in this Mother EARTH |
Posted in களம் | Leave a Comment »
During college days, when we were developing a programming language for Tamil, we were exploring the options to edit Tamil text in Windows 2k. It was not by default supported, but after selecting Indic language support and then enabling Tamil, we were able to keyin Tamil text. UI in Tamil was a different case. Althought support for local languages was there, there is no support for Windows UI in Tamil. I remember trying out Tamil UI in Linux. Official support from RedHat was available and few guys were doing the translations and creating a Tamil locale for Kde. It was an appreciable effort and it worked. (I remember that the RedHat version 7.x. Not sure of the status now). With XP things are better. Windows provides Tamil UI. I tried it yesterday Its coooooool I should say! Look at the screen shots:
Click here to download the Tamil language pack !
Posted in களம் | Leave a Comment »
Don’t miss even a single word…
Every second is worth reading this mail…
Too good An atheist professor of philosophy speaks to his class on the problem science has with God, The Almighty.
He asks one of his new students to stand and…..
Prof:
So you believe in God?
Student:
Absolutely, sir.
Prof:
Is God good?
Student:
Sure.
Prof:
Is God all-powerful?
Student:
Yes.
Prof:
My brother died of cancer even though he prayed to God to heal him.
Most of us would attempt to help others who are ill. But God didn’t. How is this God good then? Hmm?
(Student is silent.)
Prof:
You can’t answer, can you? Let’s start again, young fella… Is God good?
Student: Yes.
Prof:
Is Satan good?
Student:
No.
Prof:
Where does Satan come from?
Student:
From…God.. .
Prof:
That’s right. Tell me son, is there evil in this world?
Student:
Yes.
Prof:
Evil is everywhere, isn’t it? And God did make everything. Correct?
Student:
Yes…
Prof:
So who created evil?
(Student does not answer.)
Prof:
Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don’t they?
Student:
Yes, sir.
Prof:
So, who created them?
(Student has no answer.)
Prof:
Science says you have 5 senses you use to identify and observe the world around you.
Tell me, son…Have you ever
seen God?
Student:
No, sir.
Prof:
Tell us if you have ever heard your God?
Student:
No, sir.
Prof:
Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter?
Student:
No, sir. I’m afraid I haven’t.
Prof:
Yet you still believe in Him?
Student:
Yes.
Prof:
According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn’t exist.
What do you say to that, son?
Student:
Nothing. I only have my faith.
Prof:
Yes. Faith. And that is the problem science has.
Student:
Professor, is there such a thing as heat?
Prof:
Yes.
Student:
And is there such a thing as cold?
Prof:
Yes.
Student:
No sir. There isn’t.
(The lecture theatre becomes very quiet with this turn of events.)
Student:
Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat..
But we don’t have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we can’t go any further after that.
There is no such thing as cold . Cold is only a word we use to describe the absence of Heat.
We cannot measure cold. Heat is energy . Cold is not the opposite of heat, sir, just the absence of it .
(There is pin-drop silence in the lecture theatre.)
Student:
What about darkness, Professor? Is there such a thing as darkness?
Prof:
Yes. What is night if there isn’t darkness?
Student :
You’re wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light…..
But if you have no light constantly, you have nothing and it’s called darkness, isn’t it? In reality, darkness isn’t.
If it were you would be able to make Darkness darker, wouldn’t you?
Prof:
So what is the point you are making, young man?
Student:
Sir, my point is your philosophical premise is flawed.
Prof:
Flawed? Can you explain how?
Student:
Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure.
Sir, science can’t even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one.To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is not the opposite of life: just the absence of it. Now tell me, Professor.Do you teach your students that they evolved from a monkey?
Prof:
If you are referring to the natural evolutionary process, yes, of course, I do.
Student:
Have you ever observed evolution with your own eyes, sir?
(The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.)
Student:
Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavor, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher? (The class is in uproar.)
Student:
Is there anyone in the class who has ever seen the Professor’s brain?
(The class breaks out into laughter.)
Student:
Is there anyone here who has ever heard the Professor’s brain, felt it, touched or smelt it? No one appears to have done so.
So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain,sir.
With all due respect, sir, how do we then trust your lectures, sir?
(The room is silent. The professor stares at the student, his face unfathomable. )
Prof:
I guess you’ll have to take them on faith, son.
Student:
That is it sir… The link between man & god is FAITH . That is all that keeps things moving & alive.
(I believe you have enjoyed the conversation. ..and if so….you’ll probably want your friends/colleagues to enjoy the same…won’t you?…. )
This is a true story, and the
Student was none other than………
APJ Abdul Kalam, the former president of India .
Posted in களம் | Leave a Comment »
One Night 4 college students were playing till late night and could not
study for the test which was scheduled for the next day.
In the morning they thought of a plan. They made themselves look as dirty
with grease and dirt. They then went up to the Dean and said that they had
gone out to a wedding last night and on their return the tyre of their car
burst and they had to push the car all the way back and that they were in
no condition to appear for the test.
So the Dean said they could have the re-test after 3 days. They thanked
him and said they would be ready by that time. On the third day they
appeared before the Dean.. The Dean said that as this was a Special
Condition Test, all four were required to sit in separate classrooms for
the test… They all agreed as they had prepared well in the last 3 days.
The Test consisted of 2 questions with a total of 100 Marks.
Q.1. Your Name………………………. (2 MARKS)
Q.2. Which tyre burst? (98 MARKS)
a) Front Left
b) Front Right
c) Back Left
d) Back Right…..!!!
True story from IIT Bombay …Batch 1992
Posted in களம் | Leave a Comment »
பிரிந்தபடி இணைந்திருந்தோம்
இணைந்தே பிரிந்தோம்…
ஒரு நொடி ஒரு நிமிடம்
ஒரு மணி நேரம் என
ஒரு மாதமானது….
பேசுவாய் என தெரிந்தும்
பேசாமலே இருக்கின்றேன்
உ(எ)னக்காக….
——————————————-
உன்னை நினைக்க மறுத்து
மறக்க நினைத்து
எதெதோ செய்கிறேன்….
எங்கேயோ இருந்தும் அனிச்சை செயலாய்
இருக்கிறாய் நீ…..
வேண்டாம் என்று சொன்னாலும்
துடிக்கின்ற இதயத்தை போல…..
———————————————-
நான் தான் நீ ….
நீ தான் நான் ….
பிரிவு நமக்கில்லை என
எதெதோ சொல்லி
எனை தேற்ற முயல்கிறாய்…..
உண்மை எதுவென உணர்ந்தும்
‘அந்த சாக்லேட் தான் வேண்டுமென’
அடம் பிடிக்கும் குழந்தையாய்
உன்னிடமே மீண்டு(ம்) வருகிறது
நினைவுகள்….
நன்றி: பிரியா
Posted in களம் | Leave a Comment »
The Satyam Computers has collapsed, the company seems suddenly a big lie . Satyam has grabbed world headlines for some wrong reasons . Greed amd materialistic comforts are the evils driving us to commit frauds . When Raju’s greed took over on Dalaal Street, an tsunami occurred on Main Street. The whole Satyam fraud is just the tip of the iceberg. In a corrupt system the more one dwell into corporate mis- Governance more of Satyam kind will pop-up. Before one can forget Enron,Worlcom,Daewoo .. Satyam has done , which scared one and all . Imagine what will happen if Reliance is investigated ???
Raju shud get capital punishment, if not atleast life imprisonment. if he is let off with meager punishment , others like Raju will get the motivation to do the same or bigger fraud. Raju shud get atleast Rigorous–Imprisonment where he in jail in his striped half-pant (chaddi) be made to work in sun in breaking the stones and that earns him Rs 50 a day . This will for sure teach him a great lesson which he missed studying in his Harvard University .
SEBI shud wake up now and investigate all the Software, Reality, Pharma companies who are presenting 30% profits in every quarter . SEBI and other regulatory bodies shud start auditing all the accounts of top companies .This is an wake up call for Corporate -India , message is straight and simple , set right the house with right governance are fall apart just like Satyam.
Its time SEBI and other regulatory bodies are totally revamped and financial frauds made a criminal offence. We all know how so many financial companies have duped investors, using fictitious offers. The biggest culprit behind the whole episode is the Institute of Chartered Accountants of India. Here is an institute which never reformed itself over several decades and acted in favour of few of big Corporates. Most of the CAs doesn’t have basic knowledge forget updating it. They are just like “Clerks” in some Govt office , always ready to give tips for Tax evasions . The audit profession in India is only “self-regulated” by the CA Institute not like the USA where the auditors are regulated and fined regularly for any oversights . These CA’s employ bunch of fresh Bcom guyz with little auditing knowledge and send them to do the corporate auditing , where the Corporate giants easily manage these vulnerable Freshers to inflate the numbers to match the Balance Sheet . And we know our Joker CA’s sign these audited papers without looking into, over an Double-Malt Imported Whisky . What a shame …. Before arresting Ramalinga Raju these auditors shud be held and tried for duping the innocent investors . All the properties of Promoters , Board Members , Auditors shud be confiscated , and their Bank accounts , passports seized . Hereafter, all financial frauds shud be considered as an Criminal offence ,laws shud ne amended that if proven culprit shud get RI .
In Indian villages Farmers take small loans of Rs 20000- 50000 for purchasing Seed, Pesticides . If harvest is not gud and farmers doesn’t get gud price for crop he commits suicide out of guilt of not repaying debt . Now we have people like Raju who have no shame or guilt in saying that he steal Rs 7000 Cr and have no idea as where this booty has gone and further claims the he or his spouse did not do it for their comforts . India wake Up before its too late , real India is in Villages .
The bigger crook you are, the more respect you will get . And for rich in India the law is always different.Here is a man who has deliberatly tarnished the image of the country and put the life of 53000 employees, 3000 vendors and 20000 stock holders and 600 clients under cloud and still escapes to unknown place. If his mistake is related to so many lives, he deserve hanging .
Courtesy: Raj Karsewak
Posted in களம் | 3 Comments »
அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்
பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.
கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.
தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.
ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்
எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது
“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது
திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.
அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது ‘முதலாளித்துவம் ஒழிக!’
இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். “கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…” (நாணயம் விகடன், அக்15)
எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.
அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை ‘நெருக்கடி’ என்று கூறுகின்றது முதலாளித்துவம்.
வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி’ தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக்
இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.
“வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்” என்று முடிவு செய்தார்கள்.
ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.
நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். ‘ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். தயங்கியவர்களிடம், ’10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்’ என்று ஆசை காட்டினார்கள். ‘வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்’ என்று வலையில் வீழ்த்தினார்கள். ‘அதுவும் கஷ்டம்’ என்று மறுத்தால், ‘பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்’ என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.
இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் ‘கடன் வேண்டுமா?’ என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல ‘வீடு வேண்டுமா?’ என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.
ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. ‘விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்’ என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.
ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. ‘ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ’ என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.
விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் ‘வீடு வேண்டாம்’ என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?
ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.
எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure) , வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். “இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு” என்று கோருகின்றார்கள் மக்கள்.
திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.
ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.
பொதுவாக, கடன் என்பது ‘கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்’ மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.
இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு ‘மிக நம்பகமான கடன்கள்’ என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.
பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! ‘இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக’ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், ‘ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய’ டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!
பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!
நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது!
உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை ‘டர்ர்ர்’ என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.
35 இலட்சம் கோடி ‘மொய்’ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த ‘சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்’துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ ‘அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை’ என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?
அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, ‘சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!’ என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?
முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். ‘கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது’ என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?
“தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்” என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், “அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்” என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.
யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?
தாங்கள் அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், ‘போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்’ ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?
பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். “ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்” என்று போதையூட்டினார்கள். “எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?” என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.
உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் ‘மதிப்பை’ ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் ‘பொருளாதார வளர்ச்சி’. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!
“இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!
எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். ‘உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே’ மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். “வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்” என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.
புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி’யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!
அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், ‘பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்’ என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.
‘புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
‘அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்’ என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. ‘உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’ என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். ‘மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே’ என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!
அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, ‘அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்’ என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. ‘எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக’ உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.
இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்
Posted in களம் | Tagged America surrender | Leave a Comment »
விண்மீன்களுக்கு மத்தியில் நிலா;
தீபங்களின் நடுவில் நீ!
Posted in களம் | Leave a Comment »
ആയീട്ടു എന്താനു വിശേഷം?പിന്നെ ഇല്ലേ, ഹര്ത്താലുണ്ടായിരുന്നു.!
Who is getting affected?
Posted in களம் | Leave a Comment »
ശില്പം നിര്മ്മിക്കാന് കടമെടുത്തത് പ്രകൃതിയില് നിന്നായിരുന്നു.
ഭൂമിയെടുത്ത് ശരീരം നിര്മ്മിച്ചു,
ആകാശമെടുത്ത് വസ്ത്രമിട്ടു,
നക്ഷത്രം കണ്ണിലിട്ടു,
കാര്മേഘം മുടിയില് ചേര്ത്തു,
മഴവില്ലുകൊണ്ട് ഉടുപ്പിന് ചായം കൊടുത്തു,
ചക്രവാളത്തില്നിന്നിത്തിരി ചോപ്പെടുത്ത്
ചുണ്ടില് തേച്ചു.
ഒടുവില് ഹൃദയം വെച്ചപ്പോള്,
അതൊരു വല്യ കരിങ്കല്ലായിരുന്നു.
പൂവായിരുന്നാലല്ലേ,
കശക്കിയെറിയാന് പറ്റൂ.
(സു)
Posted in களம் | Leave a Comment »
It’s not the fault of the student if he fails, because the year ONLY has 365′ days.

Typical academic year for a student: Continue Reading »
Posted in களம் | Leave a Comment »




























































